தமிழ்நாடு

இயக்குநர் கவுதமனுக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு

இயக்குநர் கவுதமனுக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு

webteam

இயக்குநர் கவுதமன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், " மே 19 ஆம் தேதி ஓ.என்.ஜி.க்கு எதிராக கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன் அனுமதியின்றி கலந்து கொண்டதாக தன் மீதும் மற்றும் பலர் மீதும் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்றும் பொய்யான வழக்குபதிவு செய்து  கைது செய்ய காவல்துறை முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றம் உத்தரவிடும் எந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டு நடந்து கொள்வேன் என்றும் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இம்மனு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது இயக்குநர் கவுதமன் முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.