தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம் pt web
தமிழ்நாடு

இருக்கை விவகாரம்: "EPS கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவேண்டும்" - தராசு ஷ்யாம்

PT WEB

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இபிஎஸ்

கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக இதுவரை 10 முறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம். எங்களது கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்கவில்லை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “இருக்கை விவகாரத்தில் சட்ட விதி என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்கிறேன். விதிப்படி, சட்டப்படி முழுமையாக யாருடைய மனம் நோகாமலும், உரிமையை பறிக்காமலும் அவை நடைபெறுகிறது” எனக் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பமாக மாறியது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. சபாநயகர் இருக்கை முன்பு இபிஎஸ் தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். “எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் பதிலில் திருப்தியில்லை” எனக் கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் ‘புதிய தலைமுறை’க்கு பிரத்யேகமாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில், “சபாநாயகர் இபிஎஸ் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து” என தெரிவித்துள்ளார்.