குறுந்தையன் pt desk
தமிழ்நாடு

தஞ்சை | சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக் கொலை - பழிக்குப் பழியாக நடைபெற்ற கொலை என தகவல்

தஞ்சை அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி மீது காரை மோதி கீழே தள்ளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ந.காதர்உசேன்

தஞ்சை மாவட்டம் ஏழுப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் குறுந்தையன். இவர் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த ஒத்தக்கை ராஜா என்பவர் குறுந்தையன் மீது காரை மோதியுள்ளார். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த குறுந்தையனை,

murder case

ஒத்தக்கை ராஜா உள்ளிட்ட இரண்டு பேர் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், குறுந்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குறுந்தையன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் v

இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2013 ஆம் ஆண்டு உலகநாதன் என்பவரையும் 2014 ஆம் ஆண்டு உதயா என்பவரையும் குறுந்தையன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இவர்களது கொலைக்கு பழிக்குப் பழியாக குறுந்தையன் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.