செய்தியாளர்: செ.சுபாஷ்
இலங்கையில் இருந்து 120 பயணிகளுடன் மதுரை விமான நிலையம் வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணி ஒருவரிடம் ஆறு பைகளில் பச்சை நிற கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து விமானத்தில் கடத்தி வந்த 3 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து இளைஞர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.