சடலமாக மீட்கப்பட்ட பெண் - போலீசார் விசாரணை pt desk
தமிழ்நாடு

தென்காசி | எரித்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் - பல கோணங்களில் போலீசார் விசாரணை

தென்காசி அருகே இளம்பெண் எரித்துக் கொலை. சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்

தென்காசி மாவட்டம் இலத்தூர் விலக்கு அருகே உள்ள குளத்தில் ஒரு இளம் பெண்ணின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? கொலையானது எப்படி கொடையாளி யார் என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். எரிக்கப்பட்டுள்ள பெண் சுமார் 30 முதல் 35 வயது வரை இருக்கலாம் எனவும் காலில் மெட்டி அணிந்துள்ளார் மேலும் முகம் மற்றும் உடல் எரிந்துள்ளதால் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது.

மேலும் மாவட்டத்தில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல்களை வைத்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அ;திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.