செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி அருகே சென்ற ஆடி கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. தீ பற்றியதும் காரில் இருந்தவர்கள் வெளியேறினர். இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தென்காசி தீயணைப்பு மீட்பு குழுவினர் வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் நடத்திய விசாரணையில், கொல்லம் பகுதியைச் சேர்ந்த அப்துல் சமது மற்றும் அவரது மகன் ஆதில் ஆகியோர் அவர்களுக்குச் சொந்தமான ஆடி காரில் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். அப்போது கார் தீப்பற்றி எரிய தொடங்கியதால் காரை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது. இது குறித்து தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.