மழை pt web
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Prakash J

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வரும் 25ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களின் ஒருசில இடங்களில், இன்றும், நாளையும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, இன்று காலை10 மணிவரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.