தமிழ்நாடு

தமிழகத்தில் இருந்த 87 வகையான நாட்டு மாடுகள்

தமிழகத்தில் இருந்த 87 வகையான நாட்டு மாடுகள்

webteam

ஜல்லிக்கட்டு என்பது வீர விளையாட்டு மட்டுமின்றி, பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாக்கவுமே நடத்தப்படுகிறது. ஆனால், காளை வகைகளின் எண்ணிக்கை கைவிட்டு எண்ணக்கூடிய அளவுக்கு குறைந்துவிட்டதாக அவற்றை வளர்ப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் முன்னொரு காலத்தில் 87 வகையான நாட்டு மாடுகள் இருந்ததாக காளை வளர்ப்போர் கூறுகிறார்கள் - அவை அத்தக்கருப்பன், அழுக்கு மறையன், ஆணறிகாலன், ஆளைவெறிச்சான், ஆனைச் சொறியன், கட்டைக்காளை, கருமறையான், கட்டைக்காரி, கட்டுக்கொம்பன், கட்டைவால் கூளை, கருமறைக்காளை, கண்ணன் மயிலை, கத்திக்கொம்பன், கள்ளக்காடன், கள்ளக்காளை, கட்டைக்கொம்பன், கருங்கூழை, கழற்வாய்வெறியன், கழற்ச்சிக்கண்ணன், கருப்பன், காரிக்காளை, காற்சிலம்பன், காராம்பசு, குட்டைச்செவியன், குண்டுக்கண்ணன், குட்டை நரம்பன், குத்துக்குளம்பன், குள்ளச்சிவப்பன், கூழைவாலன், கூடுகொம்பன், கூழைசிவலை, கொட்டைப் பாக்கன், கொண்டைத்தலையன், ஏரிச்சுழியன், ஏறுவாலன், நாரைக்கழுத்தன், நெட்டைக்கொம்பன், படப்புபிடுங்கி, படலைக்கொம்பன், பட்டிக்காளை, பனங்காய்மயிலை, பசுங்கழுத்தான், பால்வெள்ளை, பொட்டைக்கண்ணன், பொங்குவாயன், போருக்காளை, மட்டை கொலம்பன், மஞ்சள் வாலன், மறைச்சிவலை, மஞ்சலிவாலன், மஞ்சமயிலை, மயிலை, மேகவண்ணன், முறிக்கொம்பன், முட்டிக்காலன், முரிகாளை, சங்குவண்ணன், செம்மறைக்காளை, செவலை எருது, செம்மறையன், செந்தாழைவயிரன், சொறியன், தளப்பன், தல்லயன் காளை, தறிகொம்பன், துடைசேர்கூழை, தூங்கச்செழியன், வட்டப்புல்லை, வட்டச்செவியன், வளைக்கொம்பன், வள்ளிக்கொம்பன், வர்ணக்காளை, வட்டக்கரியன், வெள்ளைக்காளை, வெள்ளைக்குடும்பன், வெள்ளைக்கண்ணன், வெள்ளைப்போரான், மயிலைக்காளை, வெள்ளை, கழுத்திகாபிள்ளை, கருக்கா மயிலை, பணங்காரி, சந்தனப்பிள்ளை, செம்பூத்துக்காரி, காரிமாடு, புலிகுளம் ஆகியவை அந்தக் காளைகளாகும்.