அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தமிழக ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆளுநர் ரவி அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். மேலும், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்பான இடமாக மாற்றுவது குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகளைக் கேட்டறிந்தார்.
பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனே பிரதானமானது எனத் தெரிவித்த ஆளுநர் ரவி, பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்த நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.