vijay, eps, stalin எக்ஸ் தளம்
தமிழ்நாடு

தேர்தலுக்கு முன்பே சூடுபிடித்த அரசியல் களம்.. கரூரை முற்றுகையிடும் முக்கியத் தலைவர்கள்!

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் சூழலில், அரசியல் தலைவர்களின் தொடர் முற்றுகையால், கரூர் மாவட்டம் கவனம் பெற்றுள்ளது.

PT WEB

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் சூழலில், அரசியல் தலைவர்களின் தொடர் முற்றுகையால், கரூர் மாவட்டம் கவனம் பெற்றுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் சூழலில், அரசியல் தலைவர்களின் தொடர் முற்றுகையால், கரூர் மாவட்டம் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில்தான் கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் முப்பெரும் விழா பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி கரூரில் 2 நாட்கள், ‘மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் கரூரில் வரும் 27ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார். முதலில் டிசம்பர் 13ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த விஜயின் பரப்புரை, திடீரென மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

vijay, eps, stalin

முப்பெரும் விழா மூலம் திமுகவிற்கு எழுந்துள்ள எழுச்சியை குறிவைத்தே விஜயின் கரூர் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக, அதிமுக, தவெக வரிசையில் பாமக தலைவர் அன்புமணியும் வரும் 28ஆம் தேதி கரூரில் பரப்புரையில் ஈடுபடுகிறார். திமுக முப்பெரும் விழாவை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பழனிசாமி, விஜய், அன்புமணி என முக்கிய தலைவர்களின் பரப்புரைகளால் கரூர் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.