தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இன்று தொடங்கியது. தொண்டர்களின் ஆர்ப்பரிப்புடன், தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலுடன் மாநாடு தொடங்கியது. கலைநிகழ்ச்சிக்கு பின்னர் உற்சாக மாநாட்டு மேடைக்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.
தொடர்ந்து, அங்குள்ள விடுதலைப் போராளிகளின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிற்கு 100 உயர கம்பத்தில் தன் கட்சிக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து தவெகவின் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, கொள்கைப் பாடல் வெளியாகி இருந்தது. அதில் விஜய் பேசிய வசனமும் இருந்தது. இதையடுத்து கட்சியின் கொள்கையின் பிரகடனப்படுத்தப்பட்டன.
அந்த வகையில் தவெகவில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ”தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கு இணைப்பு மொழியான ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை தவெக பின்பற்றுகிறது. தமிழே ஆட்சி மொழி.. தமிழே வழக்காடு மொழி... தமிழே வழிபாட்டு மொழி! தமிழ்வழிக் கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.