vijay
vijayputhiya thalaimurai

தவெக மாநாடு | தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்... கொடியேற்றிய பின் உற்சாகம்!

த.வெ.க. மாநாட்டு மேடையில் நின்றபடியே பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைப் பார்த்த விஜய், கண்கலங்கினார்.
Published on

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொண்டர்களின் ஆர்ப்பரிப்புடன், தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலுடன் மாநாடு தொடங்கியது. கலைநிகழ்ச்சிக்கு பின்னர் உற்சாக மாநாட்டு மேடைக்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

தொடர்ந்து இருபக்கமும் கூடியிருந்த தொண்டர்களுக்கு மத்தியில் உற்சாகமாய் நடைபோட்டதுடன், அவர்கள் தூக்கியெறிந்த கட்சித் துண்டுகளைக் கொஞ்சமும் சளைக்காமல் கீழே குனிந்து எடுத்து தன் கழுத்தில் அணிந்துகொண்டார்.

பின்னர், திரும்பி அதை அவர்களுக்கே கொடுத்தபடி மேடைக்கு வந்தார். அங்கு வந்த எல்லாத் துண்டுகளையும் எடுத்துவைத்துவிட்டு, ஒரெயொரு துண்டை மட்டும் கழுத்தில் போட்டுக் கொண்டார். பின்னர், மேடையில் நின்றபடியே பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைப் பார்த்து, கண்கலங்கினார். தொடர்ந்து, அங்குள்ள விடுதலைப் போராளிகளின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிற்கு 100 உயர கம்பத்தில் தன் கட்சிக் கொடியை ஏற்றினார். அது உயரப் பறந்ததும், விஜய்யின் முகத்தில் உற்சாகம் பிறந்தது.

vijay
தவெக மாநாட்டு திடல்: அலை அலையாய் குவிந்து வரும் தொண்டர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com