ஆளுநர் ஆர்.என்.ரவி pt cdesk
தமிழ்நாடு

திருவள்ளூர் | சிறுவாபுரி முருகன் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.

PT WEB

செய்தியாளர்: R. கிறிஸ்துராஜன்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் தொடர்ச்சியாக 6 வாரங்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தால், நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். அந்த வகையில் ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும், செவ்வாயோடு சேர்ந்து வரும் கிருத்திகை நாட்களில் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில் இன்று வைகாசி விசாகத்தையொட்டி பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் தமிழக ஆளுஞர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் விநாயகர், ஆதிமூலவர், வள்ளி மணாளன் ஆகியோரை தரிசித்த ஆளுநர், மூலவரான பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்தார்.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இந்த ஸ்தலத்தில் சாமி தரிசனம் செய்த பின் அவர் சென்ii திரும்பினார். ஆளுநரின் வருகையையொட்டி சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், கோயிலிலும் காஞ்சிபுரம் எஸ்பி சண்முகம் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்புக்காக கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டது.