புயல் எச்சரிக்கை கூண்டு கோப்பு படம்
தமிழ்நாடு

அக்வான் புயல்| 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் அக்வான் புயல் உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Rishan Vengai

வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் 19ஆம் தேதி மிகத் தீவிரமாகவும், 20ஆம் தேதி ஆந்திர கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அக்வான் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை தீவிர புயலாகவும், 19ஆம் தேதி மிகத் தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

20ஆம் தேதி நண்பகல் நேரத்தில் ஆந்திராவின் நெல்லூர் - துனி இடையே மிகத் தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்

இந்தசூழலில் ‘அக்வான்’ புயல் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு என்பது கடலில் புயல் உருவாகியிருப்பதையும், காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதையும் உணர்த்தும் எச்சரிக்கையாகும். இதனால் மீனவர்கள் மற்றும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.