ஸ்டாலின் - ரஜினிகாந்த் X
தமிழ்நாடு

தேர்தலில் தோல்வி | ஸ்டாலினைச் சந்தித்த ரஜினி.. பேசியது என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் தோல்வியடைந்திருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார்.

Premkumar S

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். இத்தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், திமுக தோற்றதோடு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினும் தோல்வியைத் தழுவினார். இதற்கு முன்பு 3 முறை வெற்றிபெற்ற சொந்தத் தொகுதியிலேயே தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தோல்வி திமுக கட்சியினரை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தசூழலில் தான், இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, வெற்றி பெற்ற நேரத்தை தவிர; இக்கட்டான நேரத்திலும் உடனிருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, தேர்தலுக்கு முன் ரஜினிகாந்த் குறித்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியிருந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவை ரஜினி விமர்சித்து வந்தனர். அதேசமயம், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த ரஜினிகாந்த் “காலம் காத்திருந்து பதில் சொல்லும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.