ஸ்டாலின் X
தமிழ்நாடு

”Mr. Chief Minister.." முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

Mr CM, கரூர் விசாரணையில் தப்பிக்கத் தான் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசி வந்தீர்களா என்று நாம் கேட்கலாம். ஆனால், இதுபோல் நான் தரம் தாழ்த்தி கேட்கமாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Premkumar S

திமுக மாநில மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக பணி செய்த மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, துணை பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்

இந்தக் கூட்டத்தில், மகளிர் அணியை மேம்படுத்துவது குறித்தும் வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் உரையாற்றியிருக்கும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தவெக ஆட்சி குறித்தும் முதல்வர் விஜயின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகையில், வெல்லும் பெண்கள், சமூகவலைதள அணி செயல்கள் என திமுக மகளிர் அணி தேர்தலில் செய்தது. திமுக பெற்ற வாக்குகளில் மகளிர் அணியின் பணி முக்கியமானதாக இருந்தது. திமுக எதிர்க் கட்சியாக இருக்கும் நிலையில் ஆளும் கட்சியாக மாற இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்றும் அதற்கான களமாக இந்த கூட்டம் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தவெக குறித்துப் பேசுகையில், ”திமுக ஆட்சிக்கு வந்த உடன் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமை பெண் என பல திட்டங்கள் கொண்டு வந்தோம். இந்த தேர்தலில் கூட 8 ஆயிரம் கூப்பன், உரிமைத் தொகை என திமுக  தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் சமூக வலைதளத்தில் பார்த்தால் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை  இருக்கிறது. ஏன் வாக்களித்தோம் என மக்கள்  யோசிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

ஸ்டாலின்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றசம்பவத்தில் தவெக நிர்வாகிகள் தான் காரணமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. தவெக விடம் பாதுகாப்பு வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் ஆட்சியை காப்பாற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கேட்கிறார். அவரின் ஆட்சி மேல் நம்பிக்கை இல்லையா? ஆதரவு கட்சி மீதும் நம்பிக்கை இல்லையா?. தற்போது ஆதரவு அளித்த கட்சிகளும் யோசிக்கும் நிலை இருக்கிறது. Confident ஆக இருங்க என விஜய் பேசினார். ஆனால் அவர் confident ஆக இல்லை என்பது தெரிகிறது. பாஜக உடைய ஜெராக்ஸ் போன்று முதலமைச்சர் செயல்படுகிறார்” என விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், வாக்குறுதி நிறைவேற்ற தான் கால அவகாசம் தேவை. ஆனால் பாதுகாப்பு குறித்து ஏன் உடனே கேள்வி கேட்க கூடாதா என்றார். 

மேலும், தான் டெல்லி சென்றபோது என்னை அமலாக்கதுறை விசாரணை தப்பிக்கவும், பா.ஜ.க உடன் மறைமுக கூட்டணி என்றும் அப்போது விஜய்  விமர்சித்து பேசினார். ஆனால் இப்போது விஜய் என்ன செய்திருக்கிறார். Mr. CM கரூர் விசாரணையில் தப்பிக்க தான்  டெல்லி சென்று தான் சந்தீத்து பேசி வந்தீர்களா? என்று தான் கேட்கலாம் எனவும் ஆனால் இதுபோல் நான் தரம் தாழ்த்தி கேட்கமாட்டோம் எனத் தெரிவித்தார்.

விஜய்

அதேபோல, நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் உரையாற்றும்போது,  ஈ அடித்தான் காப்பியாக இருந்தால் நல்லா இருக்காது என்று நான் கூறிய 2030 க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பதை மாற்றி 2036-க்குள் ஒன்றரை ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று பட்டி பார்ப்பதைப் போல் பேசிக்கொண்டு வந்து இருக்கிறார் விஜய். அதற்காக எனது வாழ்த்துக்கள் Mr. Chief minister நன்றி ஓ சாரி மாண்புமிகு முதலமைச்சர் நன்றி என விமர்சித்துள்ளார். தொடர்ந்து, பாசிசம், பாயாசம் என நக்கல், நையாண்டி செய்தீர்கள். இது சினிமா இல்லை. ஆட்சி நிர்வாகம் என நினைத்து பார்க்க வேண்டும். மாநில உரிமை எதுவாக இருந்தாலும் திராவிட மாடல் திட்டத்தை தான் செயல்படுத்த முடியும் எனப் பேசியுள்ளார்.