கார்த்திகை மகா தீபம் முகநூல்
தமிழ்நாடு

கார்த்திகை மகா தீபம் | 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்!

கார்த்திகை மகா தீபத்தையொட்டி விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையே 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

PT WEB

கார்த்திகை மகா தீபத்தையொட்டி விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை இடையே 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் இருந்து வரும் 13, 14, 15ஆம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 4.20 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்

மறு மார்க்கத்தில்13, 14, மற்றும் 15ஆம் தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 6 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. முழுவதும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில், திருக்கோவிலூரில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் வர தடை!

திருவண்ணாமலை மகா தீப திருவிழாவையொட்டி லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இன்று காலை 8 மணி முதல் 15ஆம் தேதி காலை 6 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மகா தீபம்

காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் இருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நோக்கி செல்லும் வாகனங்கள், பர்கூர் - வாணியம்பாடி - வேலூர் - ஆற்காடு - செய்யாறு - வந்தவாசி வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் செல்லும் வாகனங்கள் வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, வேலூர், வாணியம்பாடி, பர்கூர் வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதியில்லை என்றும் காவல் துறை குறிப்பிட்டுள்ளது.