சமூக ஊடகங்கள் முகநூல்
தமிழ்நாடு

’என்ன சுத்திகிட்டே இருக்கு..!’ - முடங்கிய சமூக ஊடகங்கள்.. அவதியடைந்த பயனர்கள்!

உலகம் முழுவதும், வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியதால், பயனாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

PT WEB

உலகம் முழுவதும், வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியதால், பயனாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மெட்டாவின் கீழ் இயங்கும் வாட்ஸ் ஆப் செயலியில் மெசேஜ் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவுகளை போட முடியாததால், பயன்பாட்டாளர்கள் அவதியடைந்தனர்.

மொபைல் செயலிகளில் மட்டுமல்லாமல், இந்த சமூக ஊடகங்களை கணினியில் பயன்படுத்தவும் முடியாமல்போனது. இதனால் அவதிக்குள்ளான பலரும், எக்ஸ் வலைத்தளம் வாயிலாக தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பதிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து, தொழில்நுட்ப கோளாறு பிரச்சினையை சரிசெய்யும் பணிகளில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டது.