மாதவரம்
மாதவரம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை: வடபெரும்பாக்கம் பகுதியில் 6 நாட்கள் ஆகியும் வடியாத வெள்ளம்.. மக்கள் கடும் அவதி!

PT WEB

சென்னை மாதவரம் வடபெரும்பாக்கம் பகுதியில் ஆறு நாட்களாகியும் வெள்ளம் வடியாததால் அப்பகுதி மக்களின் அவதி தொடர்கிறது. ஆறு போல தொடர்ந்து தண்ணீர் ஓடுவதால் எப்போது வெள்ளம் வடியும் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும் மாதவரம் சட்டமன்ற தொகுதியில் இருக்கும் வடபெரும்பாக்கம் பிரதான சாலையில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் தேங்கி இருக்கிறது. இதனால் வாகன ஒட்டிகள் சிக்கல்களை சந்திப்பது மட்டுமில்லாமல் அருகில் இருக்கும் கிருஷ்ணா நகர், அறிஞர் அண்ணா நகர் குடியிருப்பு மக்களும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

மாதவர

நான்கு நாட்களுக்கு முன்பு இடுப்பளவு இருந்த தண்ணீரில் மிதந்த நிலையில் ஒரளவு குறைந்து இருந்தாலும் இயல்பு நிலைமைக்கு திரும்பவில்லை என ஆதங்கப்படுகின்றனர். செங்குன்றம் பகுதியில் இருந்து மாதவரம் நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஒட்டிகள் இந்த வழியை பயன்படுத்துகின்றனர்.

அதேபோல சில நிறுவனங்களும் செயல்படும் நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருக்கிறது.  புழல் மற்றும் கொரட்டூர், ரெட்டேரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் உடனடியாக செல்லாததுதான் பாதிப்புக்கு காரணம் என்கின்றனர். தற்போது தண்ணீர் வடிய, மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறப்பு ஐ. ஏ.எஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தெரிவித்த அப்பகுதி மக்கள், “ 2011 ஆம் ஆண்டு மாநகராட்சி விரிவாக்கம் செய்த பிறகும் மழை காலத்தில் இதுபோன்ற இன்னல்களை சந்தித்து இருக்கிறோம். எனவே ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற கூடுதலான கால்வாய் வசதிகள் ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்” என்பதும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.