மூழ்கிய வீடு, வாகனங்கள்! காப்பீடு பெறுவது எப்படி? - அனைத்து சந்தேகங்களுக்கும் நிபுணர்களின் விளக்கம்

கனமழை வெள்ளத்தில் மூழ்கிய கார்களுக்கு காப்பீடு பெற முடியுமா? வெள்ளத்தில் மூழ்கிய கார்களுக்கு முதலில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

சேதமடைந்த கார்களுக்கு 3 வகைகளில் இழப்பீடு பெறமுடியும். கார்பெட், டேஷ் போர்டு, முழு சேதம் என கணக்கிடுவார்கள். ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் சேத மதிப்பீட்டை கணக்கிடுவார்கள். இழப்பீடு பெற வேண்டும் என்றால் காப்பீடு எடுத்திருப்பது அவசியம்.

வெள்ளத்தில் மூழ்கிய காரை என்ன செய்ய வேண்டும்?

மழை வடிந்தவுடன் காரில் தேங்கி இருக்கும் நீரை முதலில் வெளியேற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் காரை ஸ்டார்ட் செய்யக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட கார் மெக்கானிக்குகள்(அ) கார் வாங்கிய டீலரிடம் பரிசோதித்து சேத மதிப்பை அறிந்து கொள்ள வேண்டும்.

கார் நிறுத்தப்பட்டிருந்த இடம், சேதங்கள் குறித்த புகைப்படங்களை எடுத்து ஆதாரமாக வைத்து கொள்வது அவசியம்.

ஆர்சி, காப்பீடு பெற்ற ஆவணம் உள்ளிட்டவற்றை சேர்த்து காப்பீடு நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

யாரெல்லாம் இழப்பீடு பெற முடியும்?

3ஆம் நபர் காப்பீடு மட்டும் இருந்தால் கிளைம் செய்ய முடியாது. COMPREHENSIVE CAR INSURANCE எனப்படும் விரிவான காப்பீட்டை பெற்றிருப்பது அவசியம்.

விபத்து, திருட்டு, புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட சேதத்திற்கும் இழப்பீடு பெற முடியும். காப்பீடு பெற்ற நிறுவனத்திற்கு தெரிவித்து சரியான ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். விலக்குகளை தவிர்க்க ADD-ON எனப்படும் கூடுதல் கவர் எடுப்பது அவசியம்.

எஞ்சின் பாதுகாப்பு, நுகர்பொருட்கள், சாலையோர உதவி, பூஜ்ஜிய தேய்மானத்திற்கும் கூடுதல் கட்டணம் செலுத்தி காப்பீடு பெற்றிருப்பது அவசியம்.

சேதமான கார்களுக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்?

கார் தயாரிக்கப்பட்ட ஆண்டை பொறுத்தே தேய்மான செலவுபோக இழப்பீடு வழங்கப்படுகிறது. காப்பீடு நிறுவனம் நிர்ணயிக்கும் தொகையைத்தான் இழப்பீடாக பெறமுடியும்.

மேலும் விவரங்களுக்கு காணொளியை பார்க்கவும்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com