தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகள், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று எம்ஜிஆரின் சாதனையையும் முறியடித்துள்ளார். இந்த வெற்றிக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலில் அவர் செய்த சத்ரு சம்ஹார பூஜையும் காரணம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். எதிரிகளை அழித்து, தடைகளை நீக்கி, காரிய சித்தி தரும் சக்திவாய்ந்த வழிபாடாக இது விளக்கப்படுகிறது.
முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பதிவு செய்திருக்கும் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் முதல் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற எம்ஜிஆரின் (33.52%) சாதனையை முறியடித்து விஜய் வரலாறு படைத்துள்ளார்.
தமிழகத்தேர்தலில் இப்படியான ஒரு வரலாறு படைத்த விஜய்க்கு பின்னால் அவர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை செய்ததும் ஒரு காரணம் என பிரபல ஜோதிடர்கள் கூறுகின்றனர்.. இந்த சத்ரு சம்ஹார பூஜை என்றால் என்ன? அதை செய்வதினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் திருத்தலம், கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தனித்துவமான தெய்வீக இடமாக கருதப்படுகிறது. இங்கு பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிகமாக வருகை தரும் முக்கிய தலமாக இது உள்ளது. இத்திருக்கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வது வழக்கம். குறிப்பாக திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக உயர்கிறது.
இந்நிலையில் திருச்செந்தூர் முருகனை தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் கடந்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி தரிசனம் செய்தார். அப்போது அங்கு வீற்றிருந்த முருகன், வள்ளி, தெய்வானை, சத்ரு சம்ஹார மூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். இதில் சத்ரு சம்ஹார பூஜை என்ற சக்தி வாய்ந்த பூஜையையும் விஜய் செய்தார்..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் இந்த சத்ரு சம்ஹார பூஜை (Shatru Samhara Puja) மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் சக்திவாய்ந்த வழிபாட்டு முறையாகும். முக்கியமாக இந்த பூஜையை செய்தால் தீய சக்திகளை அழித்து, எதிரிகளை வெல்ல முடியும், காரிய சித்தி அடைய முடியும் என்று நம்பப்படுகிறது.
இதில் 'சத்ரு' என்றால் எதிரி, 'சம்ஹாரம்' என்றால் அழித்தல் என்று அர்த்தம்.. அதனால் இந்த பூஜை செய்தால் உங்கள் வாழ்விலும், தொழிலிலும் உள்ள கண்ணுக்கு தெரியும் மற்றும் தெரியாத எதிரிகளை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.. .
அத்துடன் இந்த வழிபாட்டில் மூலவரான முருகப்பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாக வழிபடப்படுகிறார். சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம், கணபதி பூஜை, சங்கல்பம், மற்றும் மந்திர உச்சாடனம் ஆகியவை இந்த பூஜையின் முக்கிய அங்கங்களாகும். இந்த பூஜையை செய்தால் மகிழ்ச்சி, புகழ் மற்றும் வெற்றி போன்ற பலன்கள் கிடைக்கும் என கூறுகின்றனர் ஜோதிடர்கள்..
எதிரிகள் மற்றும் தடைகளை நீக்கி, எங்கும் வெற்றி எதிலும் வெற்றி பெற செய்யப்படும் ஒரு சக்திவாய்ந்த வழிபாடுதான் இந்த சத்ரு சம்ஹாரம் பூஜை. அதனால் தனது அரசியல் பயணத்தில் உள்ள தடைகளை நீக்கி வெற்றி பெற விஜய் இந்த பூஜையை செய்ததாக சொல்லப்படுகிறது.. மேலும் அதிகாலையே திருச்செந்தூர் வந்த விஜய்கு கோயில் நிர்வாகம் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றது. மூலவர் மற்றும் சண்முகப் பெருமானை தரிசித்த விஜய், கோயில் உள்ளே உள்ள குகை சன்னதியில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்றார்.
அதுமட்டுமல்லாமல் சக்தி வாய்ந்த இந்த சத்ரு சம்ஹரா பூஜையை ஏற்கனவே பல பிரபலங்களும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் போன்றோரும் திருச்செந்தூரில் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..