புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் தமிழக அரசியல் நிலவரம் முதல் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை வரை விவரிக்கிறது.
அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரனின் குற்றச்சாட்டுகளில் உள்நோக்கம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
”அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை” என அமமுக பொதுச் செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.
”தேசிய ஜனநாயக கூட்டணியில் பன்னீர்செல்வம், தினகரன் இணைவது குறித்து தலைவர்கள் சேர்ந்து முடிவு எடுப்பார்கள்” என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
”திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் இடையே இருப்பது கூட்டணி அல்ல, அதையும் தாண்டி புனிதமானது” என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
”அண்ணா உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்திருப்பார்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்மானுவேல் மேக்ரான் அரசின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக அரசுத்துறை ஊழியர்களின் போராட்டத்தால் பிரான்ஸ் ஸ்தம்பித்தது.
ஆசியக் கோப்பை டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட்கள் வீழ்த்தி இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’மதராஸி’ திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.