செங்கோட்டையன், செல்வப்பெருந்தகை x page
தமிழ்நாடு

ஜெயலலிதா பற்றி பேசுவதா? முதல் நபராக சட்டப்பேரவையில் பொங்கி எழுந்து கத்தி பேசிய செங்கோட்டையன்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து செல்வப்பெருந்தகை பேசியபோது செங்கோட்டையன் பொங்கி எழுந்தார்.

PT WEB

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்து செல்வப்பெருந்தகை பேசியபோது செங்கோட்டையன் பொங்கி எழுந்தார். சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு விவகாரம் குறித்து முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது செல்வப் பெருந்தகை பேசும்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு சில விஷயங்களை பேசினார் (அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது).

கே.ஏ.செங்கோட்டையன்

அது அதிமுகவினரை கோபமடைய செய்த நிலையில் முதல் ஆளாக உஷ்ணமாகி எழுந்த செங்கோட்டையன் ஆக்ரோஷமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை நோக்கி கத்தினார்.

அம்மாவைப் பற்றி அவர் விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார் நீங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கலாமா என்பது போல ஆவேசப்பட்டு பேச உடனே சுதாரித்துக் கொண்ட மற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து அமலில் ஈடுபட்டனர் பிறகு அந்த விவகாரம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.