செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் உள்ள நாடார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு. இவர், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள கோவிலூரில் வசித்து வருகிறார் அதே பகுதியைச் சேர்ந்த இவருடைய நண்பரான மணிகண்டனுடன் சேர்ந்து மதுரையில் இருந்து கேரளா பதிவேண் கொண்ட வேனில் 138 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது ஆண்டிப்பட்டி காவல்துறையினர் நகர் பகுதியில், ரோந்து பணியின் போது சோதனை செய்து புகையிலை பொருட்களை கைப்பற்றி இரண்டு பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைபுதூர் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கணேஷ் பாபு, மணிகண்டன் மற்றும் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அஜித்குமார், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், முருகன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது