தமிழ்நாட்டின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன், இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். இதில் கல்வி, மருத்துவம் மற்றும் முதியோர் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறை நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது எனவும் முந்தைய ஆட்சிக்காலக்கட்டங்களில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கே தவெக அரசு பெயர் மாற்றி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
அந்தவகையில் தான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப் பெருக்கத்திற்கான நடவடிக்கைகளோ எதுவுமற்று, வெற்றி எனும் பெயரை மட்டுமே கொண்டுள்ள வெற்று அறிக்கைதான் தவெக அரசின் நிதிநிலை அறிக்கை என தமிழக அரசின் பட்ஜெட் 2026 குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது.