திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் இருந்த கொலுசு திருகாணியை மருத்துவர்கள் பாதுகாப்பான முறையில் வெளியே எடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் எருதுபட்டி பகுதியை சேர்ந்த 3 வயது சிறுவன் தவறுதலாக கொலுசிலிருந்த திருகாணியை விழுங்கியுள்ளார். அது மூச்சுக்குழாய்க்குள் சென்றது எக்ஸ்ரேவில் தெரியவந்த நிலையில் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிறுவனை, அவரது பெற்றோர் அனுமதித்தனர்.
சிக்கலான இடத்தில் இருந்த திருகாணியை நவீன கருவி மூலம் மருத்துவர்கள் குழு சாதுர்யமாக அகற்றியது. தற்போது சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்