பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  கோப்புப்படம்
தமிழ்நாடு

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் இன்று மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்தில் இன்று மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

மதுரை, திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கரூர், தேனி, தருமபுரி, திருவாரூர், நாமக்கல், நாகை, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இம்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:

தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், புதுச்சேரி, திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பழநி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.