பள்ளி சீருடையுடன் கலந்துகொண்ட மாணவர்கள் pt web
தமிழ்நாடு

இபிஎஸ்ஸை வரவேற்க பாஜக துண்டுடன் பள்ளி சீருடையில் பங்கேற்ற மாணவர்கள்; சர்ச்சையில் அதிமுக!

”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி-யை வரவேற்க பாஜகவின் துண்டு அணிந்தும், கையில் பூவை வைத்துக் கொண்டும் அரசு பள்ளியில் படிக்கும் மூன்று சிறுவர்களை பள்ளி சீருடையுடன் அழைத்து வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பல கட்சிகளும் தங்கள் பரப்புரையை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயளாலரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொணடு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி, ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” பரப்புரை செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, உரையை கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவினரும் வந்திருந்தனர். அப்போழுது அரசு பள்ளியில் படிக்கும் மூன்று சிறுவர்கள் பற்றி சீருடையுடன், பாஜகவின் துண்டு அணிந்தும், கையில் பூவை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பெண்களுடன் நின்றிருந்தனர்.

பள்ளி சிறுவர்களை சீருடையுடன், அரசியல் கட்சி கூட்டத்திற்கு அழைத்து வந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேப்போன்று பள்ளி சிறுவர்களை அரசியல் கட்சி கூட்டத்திற்கு அழைத்து வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதிமுக கூட்டத்தில் பள்ளி சிறுவர்களை அழைத்து வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.