சேலம் நங்கவள்ளியில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை AVS கல்வி குழும செயலாளர் ராஜா விநாயகம் புதிய தலைமுறையின் செயல் ஆசிரியர் திருப்பதி மற்றும் TLF கல்வி நிறுவனத்தின் நிறுவனர் நாகலட்சுமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
பொது தேர்வை எப்படி எதிர் கொள்வது? பள்ளி படிப்புக்கு பின் என்ன படிக்கலாம்? என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பொதுத் தேர்வுக்கான தயாரிப்பு குறித்தும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக விளக்கப்பட்டன.
அத்துடன் இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட சவாலான பாடங்களின் நுணுக்கங்களை ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக இந்கிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவிகள் தெரிவித்தனர்.