madurai railway junction pt desk
தமிழ்நாடு

சேலம் | ரயிலில் குழந்தையை கொடுத்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர் - போலீசார் விசாரணை

மதுரை ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர் கொடுத்து விட்டுச் சென்ற குழந்தையை சேலம் இருப்பு பாதை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: மோகன்ராஜ்

நாகர்கோவில் இருந்து பெங்களூர் செல்லும் ரயில் வண்டியில் பின்பக்க பொதுஜன பெட்டியில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது மதுரை ரயில் நிலைய நடமேடையில் வண்டி நின்ற போது அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் 8 மாத ஆண் குழந்தையை கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாகக் கூறி சென்றுள்ளார். இதையடுத்து ரயில் திண்டுக்கல் வந்ததும் குழந்தையை கேட்டு யாரும் வரவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த வீரமணி, 139-க்கு கால் செய்து தகவல் தெரிவித்துள்ளார். அதன்; பேரில் சேலத்தில் இருப்பு பாதை காவல்துறையினர் வீரமணி என்பவரிடம் இருந்து குழந்தையை பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து அந்தக் குழந்தையை போலீசார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.