செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன் என்பவரது மகன் விக்னேஷ் (28). இவர், தம்மம்பட்டி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை தற்காலிக ஊழியராகவும், மின்வாரிய அலுவகத்தில் தின கூலியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் தம்மம்பட்டி பகுதியில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது காரணமாக அதனை சீரமைக்க மின் கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தம்மம்பட்டி போலீஸார், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.