பாம்பு பிடி வீரர் pt desk
தமிழ்நாடு

சேலம் | தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பாம்பு பிடி வீரரால் பரபரப்பு

ஓமலூர் அருகே பாம்பு பிடி வீரரை கடிதம் கண்ணாடி வீரியன் பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரியகாடம்பட்டியைச் சேர்ந்த சிவப்பிரகாசம், நெசவு தொழிலாளியான இவர், பாம்பு பிடிக்கும் தொழிலையும் செய்து வருகிறர். இவர், இதுவரை 3500-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். இந்த நிலையில், தாரமங்கலத்தில் மரக்கடையில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது, சிவப்பிரகாசத்தை பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து உடனடியாக பாம்பை பிடித்து பையில் போட்டுக் கொண்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 108 ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த சிவப்பிரகாசத்தை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், அரசு மருத்துவமனை முழுவதும் பரபரப்பானதை அடுத்து பாம்பை மருத்துவமனைக்கு வெளியே வைத்துவிட்டு சிகிச்சைக்காக சிவப்பிரகாசத்தை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை வீரர்கள் வந்து பாம்பை மீட்டுச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.