சாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு pt desk
தமிழ்நாடு

சேலம்: உலகப் புகழ் பெற்ற முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்!

வாழப்பாடி அருகே உலகப் புகழ் பெற்ற முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். திடீரென கோயிலுக்கு வந்த நடிகர் யோகிபாபுவை பார்த்த ரசிகர்கள் ஆர்வத்துடன் அவரோடு போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். அச்சமயத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த தனியார் பள்ளி மாணவ மாணவிகள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

நடிகர் யோகிபாபு

கோயிலுக்கு வந்த நடிகர் யோகிபாபுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. யோகிபாபு அதில் கலந்து கொண்டார்.

மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் முருகனின் திருவுருவ படம் வழங்கி கௌரவப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் யோகி பாபு.