நடிகர் ரோபோ சங்கர் சாமி தரிசனம் pt desk
தமிழ்நாடு

சேலம் | முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் ரோபோ சங்கர் சாமி தரிசனம்

ஆத்தூர் அருகே முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்தினரோடு சாமி தரிசனம்; செய்தார். பக்தர்கள் அவருடன் செலஃ;பி எடுத்து மகிழ்ந்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் முத்துமலை முருகன் கோயில் உள்ளது. சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோயில் வளாகத்தில் உலகிலேயே மிக உயரமான (146 அடி உயரம் கொண்ட) முருகன் சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் தனது குடும்பத்தாரோடு முத்துமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துரோபோ சங்கர் மனைவி பிரியங்கா மனம் உருகி சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து பக்தர்கள் ரோபோ சங்கருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.