காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல் pt desk
தமிழ்நாடு

சேலம் | காவல் நிலையத்திற்குள் புகுந்து காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த காவலர் குடும்பம்

ஓமலூர் காவல் நிலையத்திற்குள் புகுந்து காதல் ஜோடிக்கு காவலர் குடும்பத்தாரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 3 காதல் ஜோடிகள் காபல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது.

PT WEB

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையத்தில் நேற்று இரவு அடுத்தடுத்து 3 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று காதல் தம்பதியர் வந்ததால் காவல் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. இரண்டு ஜோடிகள், சமாதானம் செய்து அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சேலம் ஜாரி கொண்டாலாம்பட்டி டெம்போ ஓட்டுநர் ஜெயக்குமார், ஓமலூர் பாட்டி வீட்டில் தங்கி படித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி பிருந்தா என்பவைர் 5 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் இருப்பதை அறிந்து வந்த போலீஸ் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் குவிந்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் தாயார், காவல் நிலையத்தினுள் புகுந்து காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார், அவர்களை வெளியே அனுப்பினர். ஆனால் ;அவர்கள் தொடர்ந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிலையில், அவர்கள் காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், நள்ளிரவு நேரத்தில் காவல்நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. இதையடுத்து காதல் ஜோடியை போலீசார் பாதுகாப்புடன் ஜெயக்குமார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.