லிங்கம்  Pt web
தமிழ்நாடு

சபரிவர்மன் காவல் மரணம்.. மீண்டும் பேசப்படும் 1996 சம்பவம்... நாகர்கோவில் சிறையின் ரத்த வரலாறு

சபரிவர்மன் மரணம் நாகர்கோவில் சிறையின் இருண்ட வரலாற்றை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது; 1996 லிங்கம் கொலை வழக்கின் ரத்த சுவடுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

PT WEB

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் மரணமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 1996ஆம் ஆண்டு அதே சிறையில் நடந்த லிங்கம் கொலை சம்பவம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

1995ஆம் ஆண்டு மூன்று கொலை வழக்குகள் மற்றும் காவலர் ஒருவரை தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த லிங்கம், அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த குணசீலன் தரப்புடன் நீண்டகால முன்விரோதம் காரணமாக 1996ஆம் ஆண்டு 30-க்கும் மேற்பட்டோர் சிறைக்குள் புகுந்து தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டாலும், பின்னர் மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அனைவரையும் விடுவித்தது.

27 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் 2023ஆம் ஆண்டு கைது செய்தனர். லிங்கத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "லிங்கம்" வெப் சீரிஸ் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அதே சிறையில் மீண்டும் கைதி உயிரிழந்தது பழைய சம்பவத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது