ராசிபுரம் அருகேயுள்ள காகாவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடத்தின் மேற்கூரையை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அபாய ஒலி அடித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காகாவேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இச்சங்கத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் மேற்கூறையை உடைத்து உள்ளே சென்று நகைகள் இருக்கும் பெட்டக அறையை கடப்பாரையால் உடைத்துள்ளனர்.
Read Also -> பிரபல நடிகர் கேப்டன் ராஜூ திடீர் மரணம்
Read Also -> என்ன சொல்ல வருகிறது ’மெரினா புரட்சி’?
அப்போது அபாய ஒலி அலாரம் அடித்துள்ளது. அலாரம் சத்தம் கேட்டவுடன் மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். பின்னர் கூட்டுறவு சங்கத்திற்கு வந்த இரவுநேர காவலர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்க்கு வந்த நாமகிரிபேட்டை காவல்துறையினர் கொள்ளை முயற்ச்சி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டுறவு சங்கத்தில் சிசிடிவி கேமரா இருந்தும் அதனை சரியாக பராமரிக்காத அதிகாரிகளின் அலட்சியத்தால் கொள்ளை முயற்சி சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகவில்லை. கூட்டுறவு சங்க பெட்டக அறையில் சுமார் 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அவை கொள்ளையர்களின் கையில் இருந்து தப்பியுள்ளது.