[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை
  • BREAKING-NEWS சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை

பிரபல நடிகர் கேப்டன் ராஜூ திடீர் மரணம்

noted-malayalam-actor-captain-raju-dies

சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபல நடிகர் கேப்டன் ராஜூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 68.

தமிழில், நல்ல நாள், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, தர்மத்தின் தலைவன், உள்ளே வெளியே, நினைத்து நினைத்துப் பார்த்தேன் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகர் கேப்டன் ராஜூ. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சில மலையாளத் தொடர்களில் நடித்துள்ளார். இவர், ‘இதா ஒரு சினேககதா’, ’மிஸ்டர் பாவனை 99.99’ ஆகிய படங்களை இயக்கியும் உள்ளார்.

Read Also -> என்ன சொல்ல வருகிறது ’மெரினா புரட்சி’? 

Read Also -> மாணவர்கள் விடுதி அருகே இளம்பெண் கொலை ! 

இவர் கடந்த ஜூன் மாதம் தனது மகன் திருமணத்துக்காக அமெரிக்கா சென்றுவிட்டு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரு க்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு விமானத்திலேயே சுய நினைவை இழந்தார். இதையடுத்து விமானம் மஸ்கட்டில் தரையிறக்கப்பட்டு அங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து அவர் சொந்த ஊரான பத்தினம்திட்டா அருகிலுள்ள ஓமல்லூர் அழைத்து வரப்பட்டு வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ராணுவத்தில் கேப்டனாக பதவி வகித்த ராஜூ, அதற்கு பிறகு சினிமாவில் நடிக்க வந்தார். இதனால் அவர் கேப்டன் ராஜூ என்று அழைக்கப் பட்டார். மறைந்த ராஜூவுக்கு பிரமிளா என்ற மனைவியும் ரவி ராஜூ என்ற மகனும் உள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close