பனிமூட்டம் pt desk
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் மழை, பனிமூட்டத்திற்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் மழை, பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

தமிழ்நாட்டில் மழை, பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும்புதுவையில் மழைக்குவாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறியுள்ளது. அதேபோன்று, நாளை முதல் 21ஆம் தேதிவரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனிமூட்டம்

மேலும், வரும் 21ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை, 3 டிகிரி செல்சியல் வரை குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.