கர்ப்பிணுக்கு நிதியுதவி வழங்கிய ரயில்வே அதிகாரிகள் pt
தமிழ்நாடு

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி.. கருணைத்தொகையாக ரூ.50,000 வழங்கிய ரயில்வே அதிகாரிகள்!

வேலூரில் ஓடும் ரயிலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று பாதிக்கப்பட்டவருக்கு கருணைத்தொகையாக ரூ.50,000 ரயில்வே துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

திருப்பூரில் இருந்து திருப்பதிக்கு நேற்று இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த 4 மாத கர்ப்பிணி பெண், பாலியல் தொல்லைக்கு ஆளாகி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜை (30) ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர்

தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வந்ததால் கர்ப்பிணிப்பெண் உயிர் தப்பினார். ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதால் தலையில் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்ட காரணத்தால், அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்து சிகிச்சை கொடுக்கப்பட்டுவருகிறது.

ஹேமராஜ்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை நேரில் பார்த்து கருணைத்தொகையை ரயில்வே அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

கர்ப்பிணிக்கு கருணைத்தொகையை வழங்கிய ரயில்வே அதிகாரிகள்..

ஓடும் ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்த ஒரு கர்ப்பிணி, பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே துறை மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்த சூழலில் பாதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பிணியின் உடல் சீராக உள்ளதாக தெரிவித்த தெற்கு ரயில்வே, ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும் என நேற்று அறிவித்தது.

அந்தவகையில் இன்று சிகிச்சையில் இருக்கும் கர்ப்பிணியை நேரில் சந்தித்த ரயில்வே அதிகாரிகள், கருணைத்தொகையான ரூ.50,000-ஐ அப்பெண்ணிடம் வழங்கினர். ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மற்றும் சென்னை ரயில்வே மருத்துவர் அலுவலர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து தொகையை வழங்கினர்.