ராகுல் டிக்கி இன்ஸ்டா பதிவு புதிய தலைமுறை
தமிழ்நாடு

“அவரை பத்தி தேவையில்லாம தப்பா பேசாதீங்க” - ராகுல் டிக்கி இன்ஸ்டா மூலம் நண்பர்கள் கோரிக்கை!

ஈரோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இன்ஸ்டாகிராம் பிரபல ராகுல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ராகுல் டிக்கியின் இன்ஸ்டாகிராம் ஐடியில் தற்போது பதிவிடப்பட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது.

திவ்யா தங்கராஜ்

ஈரோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இன்ஸ்டாகிராம் பிரபல ராகுல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ராகுல் டிக்கியின் இன்ஸ்டாகிராம் ஐடியில் தற்போது பதிவிடப்பட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது.

மறைந்த யூ-ட்யூபர் ராகுல் டிக்கியின் இன்ஸ்டாகிராம் ஐடியில் தற்போது பதிவிடப்பட்ட போஸ்ட்

தாய் வீட்டிற்கு சென்றிருந்த தனது மனைவியை பொங்கல் முடிந்து அழைத்துவர கடந்த 17-ம் தேதியன்று சென்றிருந்தார் ராகுல். அப்போது சாலையோர தடுப்பில் மோதிய அவர் விபத்தில் சிக்கினார். அதிவேகமாக சென்றதால், அவரின் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி, இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

ராகுலின் மரணத்தை தொடர்ந்து விபத்து குறித்தும், அவரது தனிப்பட்ட வழக்கை குறித்தும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதிவேகமாக சென்றதால் விபத்து நடந்ததாகவும், ராகுல் சென்ற பைக்கின் இன்சூரன்ஸ் கடந்த டிசம்பர் 11ம் தேதியோடு காலாவதியாகியுள்ளது எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராகுலின் மனைவி வீடியோ ஒன்றை வெளியிட்டு ராகுலின் அம்மா மீது குற்றம்சாட்டி இருந்தார். தொடர்ந்து அதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுலின் தாய் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இப்படி பல்வேறு தகவல்கள் பேசப்பட்டு வந்த நிலையில், ராகுலின் இன்ஸ்டா பக்கத்தில் அவருக்கு நெருக்கமானவர்கள் சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில், “ராகுலின் மரணம் அனைவருக்கும் கஷ்டமாக இருக்கும். எங்களுக்கும் மிகுந்த கஷ்டமான ஒரு விஷயம். அவருடைய ஆத்மா சாந்தியடைய அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள்.

ராகுல் எங்களை விட்டு நீண்ட தூரம் போன நிலையில், தேவையற்ற வதந்திகளை பரப்புவதை தயவுசெய்து நிறுத்தவும். வாழ்ந்தவரை அனைவரையும் சந்தோசமாக சிரிக்க வைத்து, அனைவரிடமும் நல்ல பெயர் வாங்கினார் அவர். இப்போது அவரை பற்றி தவறாக பேச வேண்டாம்.

ராகுலுக்கு நெருக்கமானவர்கள் தவறாக பேசுவதால்தான் தற்போது இந்த பதிவு போடப்பட்டது. எப்போதும் ராகுல் நம் மனதில் நம்முடன் இருப்பார்” என பதிவிடப்பட்டுள்ளது. ராகுலின் மரணத்திற்கு பிறகு அவரது ஐடியில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளதால் அதற்கு அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.