”உடலை தொடக்கூடவிடவில்லை” மறைந்த இன்ஸ்டா பிரபலம் ராகுல் டிக்கியின் மனைவி குமுறல்!
ஈரோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமான இளைஞர் ராகுல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது பலோவர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் நீகாத சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகர். இவரது ஒரே மகனான பொறியியல் பட்டம் பயின்ற ராகுல், டிக்-டாக் மூலம் பிரபலமானவர். இவர் கடந்த சில வருடங்காளக இன்ஸ்டாகிராமில் பல்வேறு வாழ்க்கை சம்பவங்களையும் சினிமா பாடல்கள், வசனங்களை நகைச்சுவை உணர்வுகளோடு பதிவு செய்து வந்ததன் மூலம் கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராமில் 8லட்சத்து 89ஆயிரம் பலோவரை பெற்றுள்ளார்.
இதே போன்று மற்றொரு சமூக வலைதளமான யூ-டியூப்பில் 2லட்சத்துக்கும் அதிகமான பலோவரை பெற்றுள்ளார். இதனால் இவர் பதிவேற்றும் ஒவ்வொரு வீடியோவும் ட்ரெண்டிங்காகும் இதனால் தொகுப்பாளர் பணி, பல தனியார் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்றது மற்றும் வெள்ளித்திரையில் கால்பதிக்க முயற்சி என நாள்தோறும் சமூக வலைதளங்களில் ராகுல் டிக்கி ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
இதனை தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோடு அருகே கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த தேவிகாஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்று இருந்த தன் மனைவியை பார்க்க கவுந்தப்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சாலையின் வளைவில் திரும்ப முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியது.
இதில் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த கவுந்தப்பாடி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்து ராகுல் டிக்கி உடலை சொந்த ஊரான ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள அல் அமீன் தர்காவில் உள்ள மயானத்தில் ராகுலின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலத்தில் உறவினர்களை விட அவரின் ஃபலோவர்கள் மற்றும் சக யூடியூப்பர் பலர் கலந்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ராகுல் டிக்கி டிஜிட்டல் உலகத்தில் சிரிக்க வைத்த கலைஞர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊரையும் சிரிக்க வைத்தவர் இன்று எங்களை எல்லாம் அழ வைத்து விட்டு சென்று விட்டார் என்றும் வாகனத்தில் யாரும் வேகமாக செல்ல வேண்டாம் என்றும் ராகுல் டிக்கி ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் என தெரிவித்தனர். 27 வயது இளைஞரான பிரபல இன்ஸ்டாகிராமர் திரையுலகில் சாதிக்க நினைத்த நிலையில் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே ராகுலின் மனைவி தேவிகா ஸ்ரீ செய்தியாளரிடம் பேசுகையில், ராகுல் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர் என்றும் அவரின் குடிப்பழக்கத்திற்கு காரணம் அவரது தாய்தான் என்றும் கூறியுள்ளார். மேலும், ராகுல் இறந்தபிறகு அவரின் உடலை தொட்டுக்கூட அழ விடவில்லை, தன்னை அவர்களின் வீட்டில் சேர்ந்துக்கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்..