TNPSC குரூப் 4 facebook
தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு | வினாத்தாள் கசிந்ததா? - டிஎன்பிஎஸ்சி கொடுத்த விளக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்திருக்கிறார். மதுரையில் தனியார் பேருந்துகளில் A4 பேப்பர் ஒட்டி வினாத்தாள் அனுப்பப்பட்டது குறித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.

PT digital Desk

TNPSC குரூப் 4

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் சார்பில் நாளை நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய மையங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டும் நடைபெற்றது. அப்போது, வினாத்தாள்களை பேருந்தினுள் வைத்து வெளியில் A4 பேப்பர் ஒட்டி வினாத்தாள் அனுப்பப்பட்டது சர்ச்சையானது.

இந்நிலையில்தான் டிஎன்பிஎஸ்சி அதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது. வினாத்தாள் கசியவில்லை என்றும், தேர்வர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கமளித்திருக்கிறார். தனியார் பேருந்துகள் மூலம் வினாத்தாளை கொண்டு சென்றது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.