accident கோப்புப்படம்
தமிழ்நாடு

புதுக்கோட்டை | இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்து – பெண் உட்பட இருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கு அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

PT WEB

செய்தியாளர்: நீதி அரசன் சாதிக்

புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கு அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஏணப்பட்டியை சேர்ந்த முத்தையா என்பவர் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த கார் வளைவில் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது

Death

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சேலம் தாலுக்காப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், படுகாயங்களோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமியும் உயிரிழந்தார். மேலும் படுகாயங்களோடு முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காரில் வந்த முன்று பேர் லேசான காயங்களோடு உயிர் தப்பினர்.