fake investment websites
போலி முதலீடு வலைத்தளம்pt

கிரிப்டோ கரன்சி போலி முதலீடு| திரை பிரபலங்கள் படங்களை வைத்து மோசடி.. சைபர் கிரைம் எச்சரிக்கை!

பங்கு வர்த்தகம், கிரிப்ட்டோ கரன்சி போன்ற முதலீடுகள் பற்றி சமூக தளங்களில் மோசடி நோக்கிலான பதிவுகள் வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் காவல் துறை தெரிவித்துள்ளது.
Published on

பிரபலங்கள் பற்றிய பரபரப்பான தலைப்புச் செய்திகள் மற்றும் நன்கு அறியப்பட்ட செய்தி நிறுவனங்களின் போலி லோகோக்கள் அடங்கிய சமூக ஊடக பதிவுகள் பரவி வருவதாக சைபர் கிரைம் காவல் துறை தெரிவித்துள்ளது.

பங்கு வர்த்தகம், கிரிப்டோகரன்சி மற்றும் பிற நிதி திட்டங்கள் மூலம் போலி முதலீட்டு வாய்ப்புகள் ஊக்குவிக்கப்படுவதாகவும்
சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.

ஸ்ரேயா கோஷல் முதல் குடியரசுத் தலைவர் வரை..

ஸ்ரேயா கோஷல், டாக்டர் சுதா மூர்த்தி போன்ற பிரபல நபர்கள் சம்பந்தப்பட்ட போலி செய்திகளுடன் இதுபோன்ற சமூக ஊடக பதிவுகள் பெருகுவதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றோர் படங்களை பயன்படுத்தியும் மோசடி செய்ய முயற்சி நடப்பதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வுடன் இருக்குமாறு சைபர் கிரைம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com