அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் pt desk
தமிழ்நாடு

புதுக்கோட்டை | அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் - 3 பேர் உயிரிழப்பு

நமனசமுத்திரம் அருகே இரண்டு கார் ஒரு சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: நீதி அரசன் சாதிக்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நமனசமுத்திரத்தில் திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இரண்டு கார் ஒரு சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த நான்கு பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நமனசமுத்திரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த வாகனங்கள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பதால் விபத்தில் பலியானவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில். இந்த சம்பவம் அந்தப் பகுதயில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.