தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் pt desk
தமிழ்நாடு

“கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் பேசுவோம்” - பிரேமலதா விஜயகாந்த்

webteam

தேமுதிவின் கொடி நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்...

பிரேமலதா விஜயகாந்த்

‘தலைவர் இல்லா கொடிநாள்...’

“எங்கள் தலைவர், எங்கள் அன்பு தலைவர் இல்லாத இந்த ஆண்டில், மிகுந்த வேதனையோடும் மீளா துயரத்தோடும் இன்றைக்கு இந்த கொடிநாள் விழாவில் கொடியேற்றி இருக்கின்றோம். தேமுதிக தலைமை கழகம் உட்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் கழகக் கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது.

‘அன்று நடந்தது ஆலோசனை கூட்டம் மட்டும்தான்’

அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடலாம் என்பது பெரும்பான்மை மாவட்ட செயலாளர்களின் கருத்தாக இருந்தது. அதேபோல் அதிமுக கூட்டணி, அதை விட்டால் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி என 3 வழிகள் உள்ளது. மாவட்ட செயலாளர்கள் சொன்னது ‘2014 இல் ஒதுக்கப்பட்டது போல 14 சீட்டுகள் கொடுத்து மரியாதையுடன் வழி நடத்துபவர்களுடன் கூட்டணி அமைப்போம்’ என்பது. அது அவர்கள் கருத்து. தலைமையின் கருத்தோ என்னுடைய கருத்தோ கிடையாது.

admk and dmk

அன்று நடந்தது ஆலோசனை கூட்டம் மட்டும்தான். ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் கருத்தை மட்டும்தான் உங்களிடம் தெரிவித்தேன். அதனால் மீண்டும் இன்றைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்... அடுத்த ஆலோசனை கூட்டம் நடந்து அதை இறுதி முடிவு எடுத்து அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்பொழுது வருகிறதோ அதுதான் உண்மையான அறிவிப்பு. எந்த மறைமுகமும் இதற்கு கிடையாது. இது தேர்தல் அரசியல். இதில் மறைமுகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை.

‘கூட்டணி பேச்சுவாரத்தையை அவர்களே தொடங்கவேண்டும்...’

கூட்டணிக்கு தலைமையேற்றிருக்கும் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணியினர்தான் பேசுவதையை தொடங்க வேண்டும். நாங்கள் தலைமையேற்றிருந்தால் பேச்சு வார்த்தையை தொடர்ந்திருப்போம். அனைத்து கட்சிகளும் எங்களுடன் நட்புறவுடன்தான் இருக்கிறார்கள். ஆனால், தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்பதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

bjp

அதிமுக, தி.மு.க, பாஜக ஆகிய கூட்டணிக்கு தலைமையேற்பவர்கள் இதற்கான முன்னொடுப்பை தொடங்கி, எங்களுடன் வந்து பேசும் போது நிச்சயமாக எங்களது இறுதி நிலைப்பாடு என்ன என்பதை உங்களுக்கு நாங்கள் தெரிவிப்போம். யார் யாரை எந்தெந்த குழுவில் சேர்க்கவிருக்கிறோம் என்று இன்றைக்கு ஆலோசனை கூட்டம் நடக்கவிருக்கிறது.

‘தேமுதிக ராஜயசபா சீட் கேட்பதில் என்ன தவறு?’

அனைத்து கட்சிகளிடமும் ராஜ்யசபா எம்பிகள் இருக்கிறார்கள். அதனால் தேமுதிக ராஜயசபா சீட் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? மற்ற கட்சிகளில் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கும் போது, எங்களுக்கும் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது.

‘சட்டமன்றத்தில் ஆளுநர் வெளிநடப்பு விவகாரம்...’

ஒவ்வொரு முறையும் கவர்னர் சட்டசபைக்கு வரும்போதும் இது தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இது நாட்டுக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான விஷயம் கிடையாது. ஆளுநர் என்பவரும், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும் நகமும் சதையும் போல இணைந்து பயணித்தால்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. இவர்கள் எதிரும் புதிருமாக செயல்பட்டால் அதனால் பாதிக்கப்படுவது தமிழ்நாடும் தமிழக மக்களும்தான்.

உண்மையில் வருந்தத்தக்க விஷயம், இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத விஷயங்கள் இன்று சட்டசபையில் நடந்துள்ளது. இது தமிழ் மக்களாகிய நமக்கு ஏற்பட்ட தலைகுனிவாக நான் பார்க்கிறேன்” என்றார்.