நெற்றியில் திலகமிடச் சொன்ன ராகுல் காந்தி.. மீண்டும் வம்பிழுத்த பாஜக.. வைரல் வீடியோ!

ஒடிசாவில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல், அங்குள்ள கோயில் ஒன்றில் பூசாரியிடம் தனக்கு நெற்றியில் திலகமிடுமாறு அவர் கேட்கும் காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி
ராகுல் காந்திட்விட்டர்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை முன்னிறுத்தி அக்கட்சி மேற்கொள்ளும் ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது பாகம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை, மணிப்பூரிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை சுமார் 66 நாட்களுக்கு நடைபெற்று, மார்ச் 20ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இந்த யாத்திரையின் பயண நிகழ்ச்சி, தற்போது ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்திani

தனது முந்தைய யாத்திரையை போன்றே நடைப்பயணத்தின்போது, பொதுமக்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். எனினும், ஆரம்பம் முதலே ராகுல் காந்தியின் 2வது கட்ட ஒற்றுமை பயண யாத்திரை பல பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.

ராகுல் காந்தி
“என்னை மிரட்ட பார்க்கிறார் ஹிமந்த பிஸ்வா சர்மா; எத்தனை வழக்குகள் முடியுமோ அத்தனை போடுங்கள்” - ராகுல்

ஆரம்பத்தில் மணிப்பூர் மாநில அரசு யாத்திரயைத் தொடங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு, அடுத்து ராகுலின் கார்மீது தாக்குதல், அதைத் தொடர்ந்து கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு, நாய் பிஸ்கட் தொடர்பான சர்ச்சை என தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளை ராகுல் காந்தி எதிர்கொண்டு வருகிறார். இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில், நாய் சாப்பிடாத பிஸ்கெட்டை காங்கிரஸ் கட்சித் தொண்டருக்கு ராகுல் காந்தி வழங்கிவிட்டதாக வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டு, அவரை கடுமையாக விமர்சித்திருந்தது. இதற்கு ராகுல் காந்தியும் விளக்கமளித்திருந்தார்.

ராகுல் காந்தி
”ஏன் சின்ன விஷயத்தை இவ்வளவு பெரிதாக்குறீங்க?”- நாய் பிஸ்கட் வீடியோ குறித்து ராகுல் காந்தி விளக்கம்!

இந்த நிலையில், ஒடிசாவில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, இன்று (பிப்.7) ரூர்கேலாவில் உள்ள வேத்வியாஸ் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, ராகுல் காந்தி கோயில் பூசாரியிடம், ’எனது நெற்றியில் சிறிதாக திலகமிடுங்கள்' எனக் கூறும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கும் பாஜக, மீண்டும் ராகுல் மீது விமர்சனத்தைத் தொடுத்துள்ளது. ’தேர்தல் நேரத்தில் மட்டும் ராகுல் காந்தி இந்துக் கோயில்களுக்குச் சென்று திலகம், திருநீறு பூசிக்கொள்கிறார். இவர் தேர்தல் கால இந்து' என விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: “மதுரா கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டிய ஒளரங்கசீப்” - ஆர்டிஐ கேள்விக்கு ஏஎஸ்ஐ பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com