தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், இன்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது சட்டமன்றப் பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, உரிமை மீறல் பிரச்னை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து அவையில் பேச அதிமுக தரப்பில் கோரப்பட்டது. அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காத காரணத்தால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதற்கு திமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த பதிலால் முதல்வர் விஜய் சிரித்தது, அவையையே கலகலப்பாக்கியது. இதுதொடர்பான செய்தியை, இந்த வீடியோவில் பார்க்கலாம்.