அரசு பேருந்தில் இடம் பிடிக்க வீச்சருவாளை போட்ட நபரால் பரபரப்பு pt desk
தமிழ்நாடு

பொள்ளாச்சி | அரசு பேருந்தில் இடம் பிடிக்க வீச்சருவாளை போட்ட நபரால் பரபரப்பு

பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் பகுதிக்குச் சென்ற அரசு பேருந்தில் இடம் பிடிப்பதற்காக பயணிகள் இருக்கையில் இரண்டு வீச்சு அரிவாள்களை வைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: ரா.சிவபிரசாத்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளை போக்குவரத்து கழகம் சார்பிலும் தனியார் பேருந்துகளும் இயக்கி வருகின்றன. வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்ட நெரிசல்கள் அதிகமாக காணப்படும்.

govt bus

இந்நிலையில், பயணிகள் தங்கள் கையில் வைத்துள்ள கர்ச்சீப் மற்றும் பை உள்ளிட்ட பொருட்களை இருக்கையில் போட்டு சீட்டுகளை பிடிப்பார்கள். ஆனால், தற்போது பொள்ளாச்சி அரசு பேருந்தின் இருக்கையில் அமர சீட் பிடிப்பதற்காக இரண்டு அரிவாள்களை சீட்டில் போட்டு இடம்பிடிக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவம் பேருந்து நிலையத்திலும் மற்ற பயணிகளுக்கு இடையேயும் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.